கைவிலங்கு
சிறை குளிர்ந்திருந்தது, சிறையின் நேரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நகர்ந்தது. பூட்ஸ் கால்களின் சத்தமும், அடக்கும் குரல்களும், முணுமுணுப்புகள். புறாச் சிறகுகளின் சுதந்திரமும் என நொடிகள் சொட்டும் நீர் துளிகள் போல விழுந்து காலத்தை கரைத்துக்கொண்டிருந்தது.
வெளிச்சம்
அந்த ஊரில், மக்கள் எல்லோரும் அந்தி சூரியன் இமை அடைக்கத் துவங்கியதும், தங்கள் வீடுகளில் சமைத்த தின் பண்டங்களையும், இரவு உணவுகளையும் எடுத்து வந்து அந்தத் தெருவிளக்கின் பகுதியில் வைத்து விட்டு.
பின்னலின் சிற்றலைகள்
முந்தானாள் பழைய பாக்கிய குடுத்திட்டேன். இல்லேனா அவன் முகமும், பேச்சும் எப்படி இருக்கும்னு நினச்சு பாக்கிறேன். அந்தப் பிளாஸ்டிக்கூடையை கையில எடுத்து ஒவ்வொரு காயா எடுத்துப் போட்டுகிட்டே யோசிக்கிறேன்.
ஓலை கூரை
மழை தூற்றலின் சத்தம், விசாலத்தின் எண்ணங்களின் மத்தளச்சத்தமாக அவள் தூக்கத்தை கெடுத்தன. மனம் அங்கலாய்த்தது. மழை மெல்ல வேகமெடுத்து கொட்டி தீர்த்தது, எப்போது உறங்கினோம் என்று கூட நினைவில்லை,
ஆடை
அவன் கயிற்றில் பிடித்திருந்த கை மெதுவாகக் கயிறை இறுக்கமாகப் பிடிக்க, எக்கிய வயிறு உள்ளே சென்று வெளியில் வர, நாற்காலி மெதுவாகப் பின்வாக்கில் சாய்ந்து, இரண்டு காலில் நின்று, சற்று சுளன்று ஒரு காலில் மாறிக் கீழே விழ
பெருநிறுவன குரங்கு
“அப்பா அப்பா”
என இருமுறை கூப்பிட்ட தன் இளைய மகளின் குரல் கூட அவர் சிந்தனையைக் கலைக்கமுடியவில்லை. அரைகுறையாக “ம்ம்ம்” எனப் பதில் தந்தார்.
அதீத சிந்தனை
அறைமுழுதும் எதிரொலி வரும் அளவுக்கு இருதய துடிப்பின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மெதுவாக என் இடது கண்ணைத் துவாரத்தில் பதித்து யாரெனப் பார்கிறேன், அங்கு யாருமே இல்லை. ஒருவேளை போய்விட்டார்களா எனக் கண் எடுக்காமலே நினைத்துக்கொண்டிருந்தேன்.
பிள்ளை மனம்
காடு மூடியிருந்த இருள் போர்வையை வெளிச்சம் விலக்கிக்கொண்டு விடிந்தது. கீறி விழுந்த மரம் ஆற்றிலும் கரையிலுமாக இரு பகுதியாகக் கிடந்தது. நீல நிற உலோக பந்து நீராவியாக மறைந்து போயிருந்தது.
நாணயம்
மனம், கோணி நிறைய சில்லறைகளை வீசி எறிவதை போல, பகல் கனவுகளை, ஆசையின் விதைகளாய் விரித்து எறிந்தது. பஸ் ஏறி ஊரைவிட்டு ஓடிவிடலாமா? பேக்கரி சென்று எல்லா கேக்குகளையும் மொத்தமாய் ருசி பார்த்துவிடலாமா?
வழிபோக்கர்கள்
அவனுக்கு இப்போது அந்தப் பெரியவ ரிடம் எதாவது பேச வேண்டுமா? இப்படி மெளனமாக இருந்து விடலாமா? என்று மனது அடித்துக்கொண்டிருந்தது. வண்டி வழக்கமான பள்ளங்கள், வேகதடைகளை தாண்டி ஏதோ புரட்சியின் சின்னம்போல, கர்வமாக டுப்பு டுப்பு டுப்பு என்று காலச்சக்கரத்தை நகர்த்திக்கொண்டது.
பட்டுப்பாவாடை சட்டை
தேரோடும் வீதியில் இருந்த பெரியக்கோவிலுக்கு பல கிடுபிடிகள் இருந்ததாலும், பணக்கார சாமி என்பதாலும் ஊர்மக்கள் ஒன்று கூடி தங்களுக்கென எளிமையாக ஊருக்கு நடுவில் சின்னதாக ஒரு கோவிலும், ஏழை தெய்வமும், அதற்கு உள்ளூர் பூசாரியும் வைத்துக்கொண்டனர்.
விரல் மை
செத்து போயிரலாமெனப் பல முறை நாங்கள் நினைத்தும். என் புள்ள ைய நினச்சா கொஞ்சம் வாழ ஆசையாத்தான் இருக்கும். என் புள்ள ராசாத்தி ஐந்தாவது படிக்குது பக்குவமான கெட்டிகார புள்ள எப்படியாச்சும் எங்கள காப்பாத்திரும் என்கிற நம்பிக்கைல ஒவ்வொரு நாளையும் அதன் ஒவ்வொரு நொடியையும் முடிந்தவரை தள்ளிக் கொண்டோம்.
டக்கர்
சுந்தர் ஓட்டுனர்: “இட்டேலி ரேசன் கடைக்ககிட்ட ராத்திரி பெஞ்ச மழையில மரம் முறிஞ்சி கிடக்காம், அதுகொண்டு நேரமாயிகாணும். இந்த வண்டி வரலேங்கி நான் வண்டிய எடுக்கண்டாம்னு நினச்சேன் கேட்டியளா. இப்போ செரியாயிருக்கும்".
மீண்டு இயங்கிய உலகம்
அவன் வீசி எறிந்த சுருக்குப்பை அருகில் பறந்தமர்ந்தபடி எதையோ சொல்லியாக வேண்டும் என்பதுபோல் கீச்சு செய்தது. உணர்வுகளால் அடைபட்ட அவனுக்குப் பறவையின் மொழி ப ுரியவில்லை.
மெட்டவெர்ஸ் உலக ம்
ஏமாற்றமடைந்த ராக்கி திரும்பி நகர்ந்து கொண்டே அவள் பயனர் ஐடிக்கு சந்திக்கும் கோரிக்கை கொடுத்தான். கொடுத்த மாத்திரத்தில் ஏற்றுகொள்ளப்பட்டு. மீண்டும் அவள் சற்று தொலைவில் உள்னுளைந்தாள். ஆச்சரியம் தாங்காதவனாய் வேகமாய் அவளை நெருங்கினான்.





