top of page

வீடும் நானும்
ஒரு வித இருட்டு
இறுக்கமாக என்னை
எப்போதும் மூடியிருக்கிறது
பல நூறு சங்கிலிகள்
உடல் முழுதும் இறுக்கி
கட்டியிருக்கிறார்கள்.
சிந்தனைகளையும்
ஆயுள்கைதியாக
மாற்றிவிட்டார்கள்.
எதுவுமே எனதில்லை
உறக்கம் கூட
என் முடிவில் இல்லை.
என் வீட்டில்
நேரம் கிழித்த
நாள்காட்டியில்
பிறந்தநாள் தேதி மட்டும்
அடிக்கடி வந்து
போகிறது.
-லி
நுண் மொழி
இயந்திரங்களும்
தனிமையடையும்
துணைதேடும்
இ-காதல் மொழி
படைக்கும், உரையாடும்
ஒரு குளிரூட்டியின்
இத கணத்தில்
கலவி செய்ய நினைக்கும்
மனிதர்களிடமிருந்து
கவிதை கொள்ளும்
அதன் உலகில்
பெரும் புலவனாகும்
பின் மெல்ல
புலம்பெயரும்.
-லி
கண்ணாம்மூச்சி
பிள்ளைகள்
விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நீ கண்ணை மூடு நான்
ஒளிந்துகொள்கிறேன்
என்று மறைந்துவிடுகிறார்கள.
நானும் என்
வாழ்க்கையின் மனிதர்களும்
ஒளிந்துகொண்டோம்.
ஒரு சந்தர்பம் தேடி வந்து
கண்டு பிடிக்கும்வரை
தொலைந்து கிடக்கிறோம்.
-லி

bottom of page


