
சாரளம்
ஒரு பயணத்தின்
முன்னிரவின் சிறு அச்சம்
மூடும் எண்ணங்களுடன்
கடந்து கொண்டிருக்கிறது.
விட்டுப் போகும்
வேலைகளை
வந்து தொடரும்
எண்ணத்தின் நடுவில்
ஒரு வெளியை நிரப்புகிறது.
வண்ணங்கள் சேர்க்கும்
குழந்தையாக, நினைவை
சேகரிக்க தயாராகிறது,
புது காட்சிகளை
மனிதர்களை நினைக்கிறது.
பயணம் தொடரும்
வாழ்கையின் சாரளம்,
சிலர் திறந்தும்
சிலர் அவ்வபோதும்
திறக்கிறார்கள்.
-லி
எவரும் கவனிக்கப்படாத பூ
எத்தனை கவிதைகளை
இந்த உலகம் கடந்திருக்கும்
எவரும் கவனிக்கப்படாத
பூவாக அது
சிறு வாசனையுடன்
காற்றில் ஆடி
சாலையோரம்
விளையாடிக்கொண்டு
ஒரு தொடுதலுக்காக
காத்திருக்கும் தானே?
உலகம் சில நேரம்
கருணையற்றது தான்.
-லி
நிலைமாற்றம்
மணலைமூடிக்கிடக்கும்
ஒட்டகக்குட்டிகள் கடக்கும்
கால்தடங்களை
காற்று மூடிவிடுகிறது,
ஒட்டகக்குட்டிகள்
வழி அறியாமல்
தொலைந்து போகிறது.
பயத்தில் குட்டிகள்
மணலை மூடிக்கொள்கிறது.
-லி



