top of page
Filter by Tags

என்ன செய்யமுடியும்

சிந்தனை 

சிறைகொள்கிறது

இரவின் இசையாக

ஆள் அரவமில்லாமல் 

மூளுகிறது.


கண்கள் நீர்நிறைந்து 

மங்கலாகிஎச்சிலின் 

ஒரு துளி

ஊயிரை உறிஞ்சுகிறது,


என்னால் 

என்னசெய்ய இயலும்

கண்களை மூடிகண்ணீரை…

தடுப்பதை தவிர?


-லி

ஈரம்

இந்தச் சாரலின்

துளிகள், எத்தனை

மைல் கடந்து

என்னை நனைக்கிறது,

நானும் முலை

உண்ணும் பிள்ளையென

முகம் புதைத்து

சுவைக்கிறேன்.


-லி

தொலைதல்

மெல்ல மெல்ல

மனம் ஆசையின்

மாயக்காட்டினுள்

தொலைந்துவிடுகிறது

அடர் வனமில்லை,

எப்போதுவேண்டுமென்றாலும்

திரும்பிவிடலாம்.

ஏனோ மனம்

மெல்ல மெல்ல

தொலைந்துகொண்டே

தொலைகிறது.


-லி

கவலை

கீழே கிடக்கும்

சருகுகள் காற்றோடு

பயணப்படுவது,

மரஇலைகளுக்கு

சிறை அனுபவம்

தந்தது.


சருகுகளின் சிறையில்

காற்று இல்லை என்பதை

அவைகள் அறியவில்லை


-லி

ஒன்றுமில்லை

ஒரு குவளைக்குள்

கரைந்து போகும்

பனிக்கூளாக, மனங்கள்

ஒன்றுமில்லை என்கிற

வார்த்தைக்குள்

கரைந்துபோகின்றன

ஒன்றுமில்லை

சத்தியமாக…


-லி

bottom of page