top of page
Filter by Tags

கண்ணாம்மூச்சி

பிள்ளைகள்

விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.


நீ கண்ணை மூடு நான்

ஒளிந்துகொள்கிறேன்

என்று மறைந்துவிடுகிறார்கள.

நானும் என்

வாழ்க்கையின் மனிதர்களும்

ஒளிந்துகொண்டோம்.


ஒரு சந்தர்பம் தேடி வந்து

கண்டு பிடிக்கும்வரை

தொலைந்து கிடக்கிறோம்.


-லி

உழைப்பாளர் தினம்

காய்த்து போன

கைகளில் ஓய்வையும்,

நிம்மதியையும்,

சில பூக்களையும்,

கூடவே பொன், பணமும்,

ஒரு முத்தமும்

தாருங்கள்.


-லி

தனிமையின் இரை

காலை விடிந்ததும்

அவள் சென்றுவிட்டாள்

எதுவும் கேட்கவுமில்லை

சொல்லவுமில்லை.


பின் ஒரு நாள்

வேறுஒருவனுடன்

கடை வீதியில்

பார்த்தேன்.

என் தனிமை

மீண்டும் இரை கேட்டது


-லி

மனம் கேட்ட கேள்வி

எந்த கண்களும்

என்னை பார்க்கவில்லை

எவரும் என்

அருகில் இல்லை

சில கணங்களுக்கு

தனிமையுடன் மட்டும் தான்.

மனம் கேட்ட கேள்வி

நான் யார்?

இந்த தனிமையில்

என்பதே.


-லி

சோம்பல்

சுருண்டு கிடக்கும்

போர்வைக்குள்

மனதும் கிடக்கிறது

எடுத்து மடிக்காமல்

விட்டுவிடுங்கள்

சற்று நேரம் இதமாக

கண்மூடிக்கிடக்கட்டும்.

மேகம் மூடுவதுபோல

கனவும், கொஞ்சம்

பொழுதுகளை

மறக்கும்படியான

மதுவின் மயக்கமென

மனம் போர்வைக்குள்

கிடக்கிறது.


-லி

bottom of page