கிளறும் கோழிகள்
குப்பைகளைக் கிளறும்
கோழியின் அலகும்
நகமூம் மூர்கமடைகிறது
காலத்தின் இருண்ட
அகாலத்தில் மீன்களை
அது தேடி கொத்துகிறது
பிழைகளின் பட்டியலை
கொத்திப்பிடுத்து,
உரத்து கூவி
கொக்கரிக்கிறது
பெட்டையோ, சேவலோ
கோழிகள்
குப்பையை கிளறுகிறது.
-லி
வெறுமை பாலைவனம்
யாருமற்ற இந்த
கானகத்தில்
எல்லாமும் அதன்
இயல்பில்.
அதன் அதன்
பொழுதுகள்
அன்றாடத்தின்
அடர்த்தியில்.
வெறுமை பாலைவனம்
என்னிலா இந்த
கானகத்திலா?
-லி
பொய்யின் வாடை
மூத்திர மூலைகள்
பழகிவிட்டது.
போர்வைகள் மூடிய
பொய் பேய்கள்
ஓரமாய் ஒதுங்கி
எங்கும் வியாபிக்கும்
மூலையின் நாற்றம்,
எலியின் மீசைக்கு
பூவின் வாசனை.
-லி
இன்னும் பிரியவில்லை
கடைசியாய் உன்னை
கட்டிக்கொண்டது
நாம் பிரிந்த இந்த
தூரத்தைவிட
பலமடங்கு அருகில்
இருந்திருக்க வேண்டும்
மனம் இன்னும் அந்த
இடத்திலிருந்து ஒரு
அடி கூட விலகவில்லை.
நான் உள்வாங்கிய
உன் சபரிசத்தின்
வாசனை என்னைவிட்டு
இன்னும் விலகவேஇல்லை
நான் எடுத்த கடைசி
உயிர் சுவாசமும் அதுதான்.
-லி
சாரளம்
ஒரு பயணத்தின்
முன்னிரவின் சிறு அச்சம்
மூடும் எண்ணங்களுடன்
கடந்து கொண்டிருக்கிறது.
விட்டுப் போகும்
வேலைகளை
வந்து தொடரும்
எண்ணத்தின் நடுவில்
ஒரு வெளியை நிரப்புகிறது.
வண்ணங்கள் சேர்க்கும்
குழந்தையாக, நினைவை
சேகரிக்க தயாராகிறது,
புது காட்சிகளை
மனிதர்களை நினைக்கிறது.
பயணம் தொடரும்
வாழ்கையின் சாரளம்,
சிலர் திறந்தும்
சிலர் அவ்வபோதும்
திறக்கிறார்கள்.
-லி
