வாசகர்களுக்கு என் அன்பின் வணக்கங்கள்,
என்னைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள என்னவிருக்கும் என நினைத்துப்பார்கிறேன், என்னைவிட என் படைப்புகளையே உங்கள் முன் வைக்க விரும்புகிறேன், அவைகளே நான்.
உலக கண்களில், நான் ஒரு எழிய அறிமுக எழுத்தாளன் என்பதே சரியான பதிலாக இருக்கும், சிறுகதைகள், கவிதைகள், நாவல் எழுதுகிறேன், இதில் இது சரி என்றோ இல்லை இது தவறு என்றோ எனக்குத் தெரியாது. வாசகர்களாகிய உங்களுக்குச் சில நிமிடங்கள் மகிழ்வை தருமாயின் நான் எழுதுவது அத்தனையும் சரியேயென முடிவு செய்கிறேன்.
நான் கன்யாகுமரி மாவட்டத்தில் அரமன்னம் என்னும் சிறிய ஊரில் பிறந்து, இப்போது தென்காசியில் குடும்பமாக, ஒரு எளிய வாழ்க்கை.
ஒரு சிறுகதை தொகுப்பும், ஒரு குறு நாவலுமாக, இதுவரை இரண்டு ஈ - புத்தகங்கள் எழுதியுள்ளேன்.
சிறுகதைகள் சுரண்டை மின் இதழில் மற்றும் விகடன் MY VIKATAN பகுதியில் வெளிவந்திருகிறது.
எனது இணையதளம் வழியாக உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. தொடர்பு பக்கத்தின் முலம் நீங்கள் இணைந்து படைப்புகளின் விபரங்களை அறியலாம்.
உங்கள் அன்பை என்றும் நாடும்
இலா.லிவின்
வாசிப்பின ் அனுபவத்தைப்
பகிருங்கள்
#லிவின் #இலா.லிவின் # writerlivin #writerlalivin #livin #lalivin #எழுத்தாளர் லிவின் #எழுத்தாளர் இலா.லிவின் #writer livin
© 2023 by livin



