top of page
IMG_2876.JPG

உதிர்வு நாவல்

 

மிகுந்த கனத்த இதயத்தோடு பல வருடங்களாக மனதில் கிடந்த நினைவுகளின் வெளிப்பாடாக எழுதப்பட்டதே இந்த “உதிர்வு" நாவல். இந்த நாவலை ஒரு கதையாக அல்லது ஒரு புனைவாக என்னால் எழுதவே இயலவில்லை. காரணம் என் ஊரில் என்னை சுற்றி என் அம்மா உட்பட, பலருக்கும் மார்பக புற்று நோய் வந்து சிகிச்சை எடுத்தார்கள், சிலர் இறந்து போனார்கள். நான் என் அம்மாவோடு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை புற்று நோய் பிரிவில் சிகிச்சைகளுக்காக அமர்ந்திருந்த போது பார்த்த, பெண்களின் முகங்களில் இருக்கும் பயமும், வலிகளுமே இந்த நாவலின் வரிகள். அந்த வலியை இன்னொரு பெண் அனுபவித்துவிடாமல் இருக்க எடுக்கும் சிறு முயற்சியே இந்த நாவல்.

 

பெண் உடலை அவள் புரிந்து கொள்ளுதல் என்பது, முதல் மாதவிடாயில் துவங்க வேண்டும். மூன்று முக்கியமான உடல் சார்ந்த வாழ்கையை இந்த நாவல் தொட்டு செல்லும். பெண் உடலை பற்றி அவள் முழுமையாக அறிந்துகொள்ளும் போது தான் ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாக முடியும் என்பதை நம்புகிறேன் அந்த நம்பிக்கையை, 

 

“பெண் கரு ஒன்று இந்த உலகத்திற்குள் பிறந்து வளர்ந்து மீண்டும் ஒரு கருவை சுமந்து பெற்றெடுக்கும் வாழ்க்கையை ஒரு முழு வட்டத்தில்  வரைந்து, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். 

 

அன்பும், அணைப்பும்! 

                                                           - லிவின்


 

                          

vamsibooks.com

commonfolks.in

bookpick.in

Buy Now pic.png

கதை உரை

ஒரு பெரும் மழையிலிருந்து ஒரு துளியை எடுத்து அதை நுண்ணோக்கி மூலம் பார்க்கும் ஒரு தன்மை தான் இந்தப் பின்னல் விசை, சென்னை வாழ்க்கையின் அன்றாடத்தில் நடக்கும் ஆயிரம், ஆயிரம் கதைகளிலிருந்து, ஒருவர் வாழ்க்கை எப்படி இன்னொருவருவது வாழ்க்கையோடு தெரிந்தோ தெரியாமலோ பின்னப்படுகிறது என்பதை மையமாகக் கொண்டு, ஒரு நிகழ்வின் விசை எப்படியொரு பெண்ணின்  வாழ்க்கையை மாற்றித் தீர்மானிக்கிறது என்பதை சொல்கிறது. 

அன்புடன்
இலா. லிவின்
 

Sila manitarkalin ulakam kindle book

சில மனிதர்களின் உலகம்

மனிதர்களின் வாழ்வின் அன்றாடம் ஒவ்வொருவருக்குமானது, அதில் தான் எத்தனை நிகழ்வுகள், அந்த நிகழ்வுகளில் சிலவற்றை இந்தப் புத்தகத்தில் சிறுகதைகளாகப் பார்க்கலாம், ஒவ்வொரு சிறுகதைக்கும் வித்தியாசங்கள் உண்டு ஒன்று நகரத்தைச் சொன்னால் மற்றொன்று கிராமத்தைச் சொல்லும், இன்னொன்று கற்பனை உலகை சொல்லும். ஒன்று மன ஆழுத்தத்தை சொன்னால் மற்றொன்று தொழில்நுட்பத்தைச் சொல்லும் இப்படி ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கதைகள்.

bottom of page